Homeபிற செய்திகள்தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து: கோவை ராவ் மருத்துவமனையில் விழிப்புணர்வு

தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து: கோவை ராவ் மருத்துவமனையில் விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராவ் மருத்துவமனை சார்பில், தாய்ப்பால் ஊட்டுதலும், அதற்கு அப்பாலும் என்ற தலைப்பில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
எப்.ஐ.சி.சி.ஐ. ஃபுளோ கோவை, ஆக்ருதி ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி மற்றும் பாலூட்டல் ஆலோ சகர் பேபி ஸ்ரீ ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்கினர்.


இதில் டாக்டர் கிருஷ் ணசாமி பேசுகையில், “குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட் டுமே வழங்க வேண்டும்,” என்றார்.
தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை, ஏற்படும் சவால்களை சமாளிப்பது, குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத் தும் காலம் குறித்து பேபி ஸ்ரீ விளக்கமளித்தார்.


மேலும், மகப்பேறு நிபுணர் டாக்டர் பி. சுகன்யா கதிர், பிரசவத் திற்குப் பிந்தைய எச்.பி.வி. தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img