fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில் செப்.15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது.

இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பொருளாளர் முருகன், சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தமிழ்மறை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், சங்கனூர் ஆனந்தகுமார், குப்புசாமி, கார்த்திகேயன், மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார்,சரஸ்வதி புஷ்பராஜ், தங்கம் சந்திரசேகர், நோயல் செல்வம், பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் ப. பசுபதி,சிங்கை சிவா, வ.ம.சண்முகசுந்தரம், கோவை லோகு, கே.எம்.ரவி,எ.எம்.கிருஷ்ணராஜூ, சிங்கை அன்பு, கஸ்தூரி அருண், மார்க்கெட் மனோ கரன், வி.ஐ.பதுருதீன், என்.ஜே.முருகே சன், அஞ்சுகம் பழனியப்பன், பரணி, பாக்கியராஜ், டெம்போ சிவா, இராமச்சந்திரன், துரை.செந்தமிழ்ச் செல்வன், நடராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காந்திபுரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img