கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையில் 100 ஆண்டுகள் சேவையாற்றி வரும் பூ.சா.கோ & சன்ஸ் அறநிலையம் தனது நூற்றாண்டு விழாவை யொட்டி, பல்வேறு கல்வி நிறுவனங்களில் நூற்றாண்டு விழா சொற்பொழிவுத் தொடரை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பூ.சா.கோ பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா சொற்பொழிவில், ஐஐடி டெல்லி இயக்குநர் டாக்டர் ரங்கன் பானர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, “இந்தியாவில் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் எதிர்காலம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை வார்ப்புத் தொழில்நுட்பத் துறை மற்றும் மின்னணுவியல், தொலைத்தொடர்பு பொறியியல் (ணிசிணி) துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.



