fbpx
Homeபிற செய்திகள்வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் வேளாண் தேசிய கருத்தரங்கு

வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் வேளாண் தேசிய கருத்தரங்கு

வாணவராயர் வேளாண்மை கல்லூரி CROPCON 2025 என்ற நிலையான மீள்தன்மை கொண்ட விவசாயத்திற்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் தொடங்கியது.

நாட்டின் பல்வேறு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

வரவேற்புரையை ஒருங்கிணைப்பாளர் எம்.ரம்யா, கிருஷ்ணமூர்த்தி வழங்கினர். தலைமை உரையை முனைவர். கே. பிரபாகர் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வாழை தேசிய ஆராய்ச்சி மையம் முனைவர். ஆர். செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து முனைவர். என். கெம்புச் செட்டி, மாவட்ட வளர்ச்சி நபார்டு வங்கி மேலாளர் சி. திருமல ராவ் ஆகியோர் பேசினர்.

முதன்மை விருந்தினர் உரையை முனைவர். டி. ராகுச்சந்தர், முதல்வர், எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் கே. ஆனந்த், நன்றி உரையை வழங்கினார்.

தொடர்ந்து டாக்டர். செல்வராஜன் பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மக்கள் தொகை 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் உணவு தானிய உற்பத்தி 6.6 மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 18% பங்களிக்கிறது, மேலும் 44% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால், அது நிலையானதாக இருக்க வேண்டும்.

தோட்டக்கலை உற்பத்தி 25 மில்லியன் டன்னிலிருந்து 360 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 70 மில்லியன் டன்னிலிருந்து 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

மீன் உற்பத்தி 2.4 மில்லியன் டன்னிலிருந்து 18.4 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img