கோவையில் இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங் களின் கூட்டுக்குழு தீர்மானத்தின் படி, இ ஃபைலிங் முறையை கண்டித்து கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய லாளர் சுதீஷ், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள் இ ஃபைலிங் முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை சரி செய்யும் வரை கட்டாய இஃபைலிங் முறையை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இ-பைலிங் முறையை கண்டித்து கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவையில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



