Homeபிற செய்திகள்வால்பாறை காவல் ஆய்வாளர் சிவக்குமாருக்கு பாராட்டு விழா

வால்பாறை காவல் ஆய்வாளர் சிவக்குமாருக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவகுமார். இவர் துணைக் கண்காணிப் பாளராக பதவி உயர்வு பெற்றுச் செல் வதால் அவருக்கு பாராட்டு விழாவால் பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

வால்பாறை கோட்ட துணை கண் காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையில் வால்பாறை உதவி ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம் வள்ளி செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் திமுக நகர செயலாளர் குட்டி என்கின்ற சுதாகர் மதிமுக நகர செயலாளர் எஸ்.கல்யாணி, அண்ணா திமுக நகர செயலாளர் மைல் கணேஷ், நகர துணைச் செயலாளர் போன் கணேஷ், விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் வீரமணி, பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் எம் ஆர் கே பாலாஜி, நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சண்முகம், ஏ ஐ என் டி சி மோகன், ஐ என் டி சி நியூ கருப்பையா, சிஐடியு பொதுச் செயலாளர் பரமசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஏசையன், உதவி ஆய்வாளர் வேல்முருகன் முருகையா மற்றும் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img