ஜாகோ ஹெல்த் நிறுவனம் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையுடன் ஒரு புதிய கூட்டாண்மையின் தொடக்கத்தை அறிவித்தது.
ஜாகோ ஹெல்த் நிறுவன அதிகாரிகள் – சார்லஸ் ஜேசுதாசன், சண்முக பிரியன், கார்த்திகேயன் பி மற்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜனனி சங்கர் மற்றும் முதன்மை மேலாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டிலேயே முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையுடன் இணைந்திருப்பது ஜாகோ ஹெல்த் நிறுவனத்திற்கு ஒரு பெருமையான தருணம்.
காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை வளாகத்தில் ஜாகோ நிறுவன சேவையைத் தொடங்குதல், ஜாகோ நிறுவனதிற்கு பின்னால் இருக்கும் மருத்துவக் குழுவின் திறமை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை அங்கீகரிப்பதாகும்.