வால்பாறையில் ஏஐஎடிசி கட்டிட தொழிலாளர் சங்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ டி கே, தனபாண் டியன், தலைமையில் நடை பெற்றது
வால்பாறையில் நடை பெற்ற தமிழ்நாடு ஏஐயூசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக் குழுவின் முடிவு படி வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஏ.டி.கே. தனபாண்டியன், ஏசையன் ஆகியோர் தலைமையில் வால்பாறை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு மாவட்ட செயலாளர் தனபாண்டியன், மேட்டுப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவ செந்தில் குமார் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் எம்ஜிஆர் நகர் கிளை சார்பில் ராஜேந்திரன் தோழர் ராஜகோபாலன் காமராஜர் கிளை சார்பாக ஏசியன் ஜெயராஜ் அண்ணா நகர் கிளை சார்பாக சங்கத்தின் நிர்வாகிகள் சிவலிங்கம் வனராஜா பாலசுப்ரமணியம் எம் சாந்தி நாகம்மா செவன்தா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இக்கூட்டத்தில் கிளைகளை புனரமைப்பது, கிளை சந்தாக்களை முறையாக செலுத்துவது, கிளை உறுப்பினர்களுக்கு நல வாரிய உதவித் தொகைகளை சரி யாக வாங்கிக் கொடுப்பது, ஆகஸ்ட் 9ல் சென்னையில் நடைபெறும் போராட்டத் தில் பங்கெடுப்பது, கிளை பேரவை கூட்டங்கள் நடத்தி சங்கத்தை முன்னெடுத்துச் செல்வது, புதிய உறுப்பினர் சேர்ப்பு ஆகியவை பற்றி ஆலோசிக் கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ராஜேந்திரன நன்றி கூறினார்.