fbpx
Homeபிற செய்திகள்மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர்களை அகற்றி விபத்தை தவிருங்கள்

மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர்களை அகற்றி விபத்தை தவிருங்கள்

தூத்துக்குடியில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நகர் புற செயற்பொறியாளர் ராம்குமார் தலைமையில் செயற்பொறியாளர் (பொது) ரெமோனா முன்னிலையில் நடந்தது.

கூட்டத்தில் ம.தி.மு.க., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சிராஜ், மாநில நிர்வாகி நக்கீரன், மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சர வணபெருமாள், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் மகாராஜன் ஆகியோர் கூட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் தெரி வித்து பேசினர்.

பின்னர் அவர்கள் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
தூத்துக்குடி மாநகர பகுதியில் பல்வேறு இடங் களில் மின் கம் பங்களில் கேபிள் டிவி வயர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி இந்த வயர்கள் லாரிகள் போன்ற வாகனங்களில் மாட்டி விபத்து ஏற்ப டுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கேபிள் டிவி வயர்களை உடனடி யாக அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்மாற்றிகள் தானாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்து விடும் வகையில் டிரான்ஸ் பார்மர்கள் சரியாக உள்ளதா என்பதை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

இதன் மூலம் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img