fbpx
Homeபிற செய்திகள்வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம்

வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் தலைமையில், மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலையில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் மருத்துவர் பொற் செல்வன், வல்லநாடு ஊராட்சி மன்றதலைவர் சந்திரா முருகன் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சுரேஷ் காந்தி, ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், பகுதி செயலாளர் சிவகுமார், ஆஸ்கர் மற்றும் வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img