கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத் தில் நடைபெற்றுவரும் நிலஅளவைப் பணி கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் நடைபெற்றுவரும் இணையவழி பட்டா மாறுதல் பணி மற்றும் நிலஅளவை ஆவணங்கள்; கணினிமயமாக்கல் போன்ற பணிகள் குறித்து நிலஅளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மதுக்கரை வட்ட அலுவலகத்தில் பட்டா மாறுதல்பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடித்து உடனுக்குடன் பொதுமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கல்வி கழகத்தில் நடைபெறும் நில அளவைப் பயிற்சி மையத்தை பார்வையிட்டு புதிதாக பணியேற்றுள்ள நில அளவை மற்றும் வரைவாளர்களிடம் நவீன கருவிகளை கொண்டு மறுநில அளவை செய் வது தொடர்பாக ப.மதுசூதன் ரெட்டி கலந்துரையாடினார்.
ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, நில அளவைத் துறை உதவி இயக்குநர் ந.கோபாலகிருஷ்ணா, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் மற்றும் நில அளவை ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.