fbpx
Homeபிற செய்திகள்கோவைபுதூர் கோவிலுக்கு குளியல் அறை, கழிப்பறைகள் கட்டித்தந்த அலையன்ஸ் சங்கம்

கோவைபுதூர் கோவிலுக்கு குளியல் அறை, கழிப்பறைகள் கட்டித்தந்த அலையன்ஸ் சங்கம்

கோவை மாவட்டம் ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் சார்பாக ரூபாய் 4 லட்சம் மதிப்பில் குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகள் கோயிலுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் சார்பாக இரண்டாவது நிரந்தர சேவை திட்டமாக கோவைப்புதூரில் அமைந்துள்ள வேணுகோபால் ஸ்வாமி திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் இரண்டு குளியல் அறைகள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்காக கோவில் கமிட்டி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆளுநர் ஸ்ரீனி வாசகரி துவக்கி வைத்தார். இதற்கான நிதி உதவியை மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி செய்திருந்தார்.

இதில், மாவட்ட அமைச்சரவை செயலாளர் கோமதீஸ்வரன், மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன், வட்டார தலைவர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் நிதிஷ் குட்டன், ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கத்தின் தலைவர் டி எஸ் குட்டன், செயலாளர் குமரேசன் மயில்சாமி, மற்றும் உறுப்பினர்கள் ஜெயகிருஷ்ணன், விஜயலட்சுமி, ஜெயஸ்ரீ உட்பட ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img