fbpx
Homeபிற செய்திகள்வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டான 2025-26ல் 03.08.2025 அன்று 15 மில்லியன் டன் சரக்குகளை கையா ண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் 11 நாட்களுக்கு முன்பாகவே துறைமுகம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு பெட்டகங்களை பொருத்தவரையில் இந்த நிதியாண்டு 03.08.2025 வரை 2,98,107 டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 2,71,620 டிஇயு சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு 9.75 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முக்கியமாக நிலக்கரி, சுண்ணாம்புக் கல், உப்பு, ராக் பாஸ்பேட், சமையல் எண்ணெய் மற்றும் கட்டுமான பொருட்கள் கையாளப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.

முக்கியமாக திருப்பூர், கோவை, மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்குபெட்டகங்கள் அதிகரிப்பால் சரக்குபெட்டகங்களின் அளவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதே போன்று வ.உ.சிதம்பரனார் துறைமுக செயல்பாடுகளை அதிகரிப்பதற்கு முக்கிய பங்களிப்பாக பிரதமர் நரேந்திர மோடி 26.07.2025 அன்று பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்குதளம் செயல்பாட்டினை நாட்டுகாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சாந்த குமார் புரோஹித், இச்சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டக முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img