fbpx
Homeபிற செய்திகள்கோத்தகிரியில் 700- மாணவர்கள் பங்கேற்றபோதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் 700- மாணவர்கள் பங்கேற்றபோதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓரஷோலயன்ஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில், லயன்ஸ் கிளப் கோத்தகிரி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கோத்தகிரி குடிமக்கள் நலச்சங்கம், பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா மற்றும் சாய் நிவாஸ் சேவா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளின் இணைப்பில் பிரம்மாண்டமான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும், மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் உற்சாகமாக பங்கேற்று, போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காந்திமைதானத்தில் தொடங்கிய பேரணி, கோத்தகிரி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.


நிகழ்ச்சியின் நிறைவாக பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா சார்பில், போதைப்பொருள் பயன் பாட்டால் தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர் கள் மற்றும் பொதுமக்கள் திர ளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இணை அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓரஷோலயன்ஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. போதைப் பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img