மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் 29.06.2026 முதல் 06.07.2026 வரை 8 நாட்கள் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி “கூட்டுறவு மூலம் வளர்ச்சி, கூட்டுறவே நாட்டுயர்வு” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மரு. தே.சித்ரா தலைமையில் கூட்டுறவு கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதகமண்டலம் சரக துணைப்பதிவாளர் ப.அஜித்குமார் கூட்டுறவு சார்பதிவாளர்கள், துணைப்பதிவாளர் அலுவலக பணியாளர் கள், இணைப்பதிவாளர் அலுவலக பணியாளர்கள், பொது விநியோகம் திட்ட அலுவலகம் பணியாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



