fbpx
Homeபிற செய்திகள்லால்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

லால்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூர் மாவட்டம் -மேல்புவனகிரி ஒன்றியம் லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் சிதம்பரம் வண்டிக்கேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார்.

சிதம்பரம் தாசில்தார் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புவனகிரி வட்டார அட்மா குழு தலைவரும் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான டாக்டர் மனோகர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்குபெற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில் புவனகிரி இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரசுதன், ஓட்டுனரணி துணை செயலாளர் சுப்பு என்ற வெங்கடேசன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் ராஜா, இளைஞரணி நிர்வாகிகள் வினோத்,நிதீஷ்குமார். மணிமாறன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img