கோவையில் செயல் பட்டு வரும் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியின் யுபிஎஸ்சி – டிஎன்பிஎஸ்சி 2026-27 (UPSC – TNPSC) கல்வியாண்டிற்கான துவக்க விழா இன்று அகாடமியின் கருத்தரங்கு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கேபிஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய வெளியுறவுப் பணியின் முன்னாள் அதிகாரி அ.நடராஜன் கலந்து கொண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலக்கு நிர்ணயம், திட்டமிட்ட பயிற்சி மற்றும் நாட்டுப்பற்றின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரையாற்றினார். கௌரவ விருந்தினராக இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) அதிகாரி வி.சிவரஞ்சினி கலந்து கொண்டு, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான அடித்தளம் என்பதை வலியுறுத்தி மாணவர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
விழாவில் யுபிஎஸ்சி – டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அகாடமி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதிய கல்வியாண்டில் மாணவர்கள் உயரிய சாதனைகள் படைக்க வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் விழா நிறைவடைந்தது.



