ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தி மெயின்ரோட்டில் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை வளாகத்தில் புதிய கிளை தன்வந்திரி பலதுறை மருத்துவமனை கணபதி ஆஸ்பத்திரி துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தன்வந்திரி குரூப் ஆப் இன்ஸ்டிட்யுசன்ஸ் தலைவர் டாக்டர் நா.கணபதி தலைமை வகித்தார். தன்வந்திரி கிரிட்டிகல்கேர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் கௌதம் கணபதி டாக்டர் பிரியங்கா கோபி கிருஷ்ணன் மூத்த மருத்துவர் டாக்டர் ஜி.நாகராஜன், கோபி ஸ்ரீசக்ரா மருத்துமனை இயக்குநர் டாக்டர் கே.வெங்கடபாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் புதிய கிளையான தன்வந்திரி பலதுறை மருத்துவ மனையை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சத்யபாமா யூஆர்ஜி சேரிடபிள் டிரஸ்ட் அறக்காவலர் ஷோபனா கணபதி. டாக்டர் சந்தியா ராம்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
விழாவிற்கு வந்தவர்களை தன்வந்திரி பலதுறை மருத்துவமனை முதன்மை தலைமை நிர்வாக அதிகாரி இ.எம்.சுரேந்தர் வரவேற்றார். நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்ட பேரவை உறுப்பினர் தமிழ் செல்வி. கோபி மருத்துவர்கள் முக்கிய பிரமுகர்கள் தன்வந்திரி டிராமா கேர் சென்டர் பணியாளர்கள் தன்வந்திரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர்கள் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய மருத்துவமனை மூலம் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களுக்கு பலதுறை மருத்துவ சேவைகள் எளிதாக கிடைக்கும் என்றும் 24 மணிநேர கண்காணிப்பில் தீவிரசிகிச்சை பிரிவு செயல்படுகிறது என்றும் டாக்டர் கௌதம் கணபதி கூறினார்.



