திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று (12ம் தேதி) புதுப் பாளையம் பேரூராட்சியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் புதிய கிளை அலுவலகத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனு தவிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வங்கி யின் சென்னை மண்டல தலைவர் சத்யபன் பெஹரா, புதுப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், பேரூராட்சி தலைவர், கிளை மேலாளர், வங்கி மேலாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.