கடலூர் மாவட்டம் குமராட்சி வட்டாரத்தில் சம்பா நெல் 28000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு பயிர் வளர்ச்சி பருவத்தில் உள்ள நிலையில் வேளாண்மை கூடுதல் இயக்குநர் (பொறுப்பு) வெங்கட்ராமன் சென்னை, வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமார்,வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் திடீர் வயலாய்வு மேற்கொண்டனர்.
மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி அதன் செயல்முறை மற்றும் பயன்பாடு குறித்தும்,தற்போது வேளாண் திட்டங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் செயலாக்கம் குறித்தும்,பயிர் காப்பீடு திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் குமராட்சி மேற்கு கிராமத்தில் நெல் பிபீடி 5204 செயல் விளக்கத்திடல் ஆய்வு மேற்கொண்டு திட்ட பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்கள்.
வேளாண் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் மின் னணு முறையில் பயிர் கணக்கெடுப்பு பதிவேற்றம் மற்றும் செயல் முறை அதன் பயன்பாடு குறித்த ஆலோசனை வழங்கினார்கள்.
ஆய்வின்போது கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் நுண் ணீர் பாசனம் செல்வம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் டி.தமிழ்வேல்,தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் புவனா, வேளாண்மை அலு வலர் சிந்துஜா, மற்றும் வேளாண்மை அலுவலர்கள், வேளாண் மாணவர்கள், குமராட்சி விவசாயிகள் உடனிந்தனர்.