fbpx
Homeபிற செய்திகள்புதியதாக கட்சி துவங்கியுள்ளவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதியதாக கட்சி துவங்கியுள்ளவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை ஆர்எஸ்.புரத்தில் ரூ9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச ஹாக்கி மைதானம் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற் கொண்டார்.
மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டிடத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். தொடர்ந்து பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டு வருகின்றார்.ஹாக்கி வீரர்கள் கோரிக்கை ஏற்று ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத் திற்குள் பணிகள் நிறைவடையும். ரூ900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடை பெறுகின்றது. புதிய பணிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது.
கோவையின் வளர்ச்சிக்காக ரூ200 கோடி ரூபாயினை முதல்வர் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப் படையில் பணிகள் நடைபெறும் என கூறியவர், ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்பட்ட உள்ளது.

கடந்த ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால் இப்போது சாலை பணிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். அதற் கான பணிகள் நடைபெற்று வருகின்றது . ரூ.200 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ரூ200 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

மின் மாற்றி கொள்முதல் செய்யப்பட்டதில் மின்வாரியத்தில் கடந்த காலங்களில் என்ன நடை முறை பின்பற்றப்பட்டதோ அந்த நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. அதில் எந்த விதமான தவறுகளும் நடைபெறவில்லை.
இதில் வேறு யார் தலையீடும் இல்லை. ஆன்லைன் முறைப்படியே விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்துள்ளது.
இதற்கான குழுவில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறி னார். விஜய் அரசியல் கட்சி துவங் கியிருப்பது குறித்த கேள்விக்கு, என்ன ஒரு வாக்கு வாங்கி இருக்கின்றது என்று தெரியாத சூழல் இருக்கிறது.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை , குறைவாக சொல் லவில்லை என தெரிவித்த அவர், அரசியல் சார்ந்த கேள்விகளை அரசியல் நிகழ்ச்சிகளில் கேளுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தொடர்ந்து, மேற்கு மண்டலத் திற்கு உட்பட்ட 38 வது வார்டு ஐஓபி காலனியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் சங்கனூர் ஓடை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டவர்,
நுண்ணறிவு பிரிவுக்கான ஒருங்கிணைந்த வணிக வரி கட்டிட பணிக்கு அடிக்கல் நட்டியும், மதுக்கரையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியை திறந்து வைத்தும், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி , மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன், எம்பி கணபதி ராஜ்குமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்பி நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, தொஅ.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சிஆர்.இராமச்சந்திரன், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல் வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img