fbpx
Homeபிற செய்திகள்‘உக்கடம் கலை மாவட்டம்’ உருவாக்க முயற்சி

‘உக்கடம் கலை மாவட்டம்’ உருவாக்க முயற்சி

ஏசியன் பெயிண்ட்ஸ், கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயமுத்தூர் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கம் (RAAC) மற்றும் பிற தொடர்புடைய கூட்டாளர்களுடன் இணைந்து St+art இந்திய அறக்கட்டளை மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ், இந்தியாவில் மற்றொரு பொது கலை மாவட்டமாக -உக்கடம் கலை மாவட்டத்தை நிறுவும் முயற்சியைத் தொடர்கிறது.

கோவையின் உக்கடம் காலனியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) தளத்தில் அமைந்துள்ள இந்த கலை மாவட்டம் இந்தியாவின் ஆறாவது மற்றும் மாநிலத்தின் இரண்டாவது திறந்த வெளி மற்றும் அனைவருக்கும் அனுமதியுள்ள பொது கலைக் கூடம் ஆகும்.

கோயம்புத்தூர் நகர மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் கூறியதாவது: “உக்கடம் கலை மாவட்டம் ஒரு நகரத்தின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட, அடையாளப் படுத்தப்பட்ட, கலப்புப் பகுதி. இப்போது கலாச்சார வசதிகளின் அதிக செறிவு ஈர்ப்பின் மையமாகச் செயல்படுகிறது.

உக்கடம் உலகிலேயே அதிகம் பேசப்படும் கலை மாவட்டங்களில் ஒன்றாக மாற்றப்படும் என்று கருதுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளூர் திறமையாளர்களுக்கு சாதகமான தளத்தை உருவாக்கும் வகையில் எதிர்காலத்தில் நகரத்தில் பல கலைத் திட்டங்களைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்.

கியுலியா அம்ப்ரோகி

கலை மூலம், இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கான வாயில்களைத் திறக்க விரும்புகிறோம்.” என்றார். St+art இந்தியா அறக்கட்டளையின் விழாக் கண்காணிப்பாளர் கியுலியா அம்ப்ரோகி கூறுகையில், St+art கோயம்புத்தூரில் பணிபுரிய உற்சாகமாக உணர்கிறது மற்றும் நகரத்துடனான எங்கள் ஈடுபாடு கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது.

இந்தப் பதிப்பின் கவனம், உக்கடம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் மற்றும் பல்லுயிர் பெருக்கத்து டனான அவர்களின் தொடர்பை நம்பியிருக்கும் ஒரு திட்டத்தை உருவாக்குவதாகும்.

வெளிகள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களை மீண்டும் கற்பனை செய்வதில் கலையின் ஆற்றலைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண் டுள்ளோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img