கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே உலக மண் வள தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்று பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பதாகை ஏந்தியும் விழிப் புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் கண் டாக்டர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.