கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாரதிபுரம் இளைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எல்.நடராஜன் (ரெப்கோ டெலிகேட், திருவண்ணாமலை), என்.கனகாம்பாள் (ரெப்கோ டெலிகேட், கிருஷ்ணகிரி) மற்றும் 2-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கனகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் பாரதிபுரம் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



