fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்து கோவில்களுக்கு தமிழக அரசு அறங்காவலர்களை நியமித்து வருகிறது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன்,
மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, சக்தி கணபதி கோவில் அறங்காவலராக இளங்குமரன், மட்டக்கடை உச்சிமாகாளியம்மன் கோவில் அறங்காவலராக இராமமூர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கான அரசாணையை டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பார்த்திபன், கோவில் பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர்,
மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிர்வாக செயல் அலுவலர் சாந்தி தேவி, ஆய்வாளர் ருக்மணி மற்றும் கருணா, மணி, அற்புதராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img