fbpx
Homeபிற செய்திகள்‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ தகுதி பெற்றோர் இதுவரை 2,39,582 பேர்

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ தகுதி பெற்றோர் இதுவரை 2,39,582 பேர்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மகளிர் பொருளாதார நிலை உயர்விற்காகவும், ஆணுக்கு பெண் சமஉரிமை படைத்தவராகவும் விளங்கிடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வந்தார்.

கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகை யில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, கல்வியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு முதல் தற்போது தமிழ்நாடு அரசின் 2023- & 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் என மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமை களை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்க றையுடன் செயல்பட்டு வருகிறார்.

தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000/- ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முதல் வர் செயல்படுத்தி உள்ளார். வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த திட்டம் கலைஞர் நூற்றாண்டான இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி முதல்வர் 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டப்பயனாளிகளுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகா மினை தொடங்கி வைத்தார்.

முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு விண்ணப் பங்கள் பெறப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அண்ணா பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- பெறு வதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 2,39,582 மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.


‘படிப்பு செலவுக்கு பயன்படும்’


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி ரேவதி கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் முனியசாமிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். தினசரி கூலி வேலைதான் பார்த்து வருகிறேன். கணவரும் அன்றாட கூலி வேலைதான் செய்றாங்க. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவிச்சாங்க. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பித்தேன். நேத்தே எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் என்னுடைய அக்கவுண்டுல ஏறியிருச்சு. ரொம்ப சந்தோசமாக இருக்கு. இந்த 1000 ரூபாய் என்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்கு, அன்றாட குடும்ப செலவுக்கு மிகுந்த உதவியா இருக்கும். இதுபோன்று மகளிர் நலன்களுக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

‘மகன் சிகிச்சைக்கு உதவும்’
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி கலா கூறியதாவது:
குடும்பத்துடன் மூன்சென்ட் அந்தோணி யார்புரத்துல வசித்து வருகிறேன். தினசரி கூலி வேலைக்கு போயிதான் குடும்பத்த பாத்துகிட்டு இருக்கிறேன்.
முதல்வர் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்னு சொன்னாங்க. பிறகு எங்க ஏரியால முகாம் நடந்துச்சு.

அங்கு போய் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துல விண்ணப்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்னுடைய செல்லுக்கு கலை ஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்னு மெசேஜ் வந்தத என்னோட பையன் காமிச்சான். ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நேத்து சாயுங்காலம் 5 மணிக்கு ஏறியிருச்சு.

மாதம் 1000 ரூபாய் கிடைக்கிறதனால இதயநோயினால் பாதிக் கப்பட்டு இருக்கும் என்னுடைய மகனுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னைப்போன்ற ஏழை, எளிய மகளிர்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
சே.ரா.நவீன் பாண்டியன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
போ.முத்துக்குமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)
தூத்துக்குடி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img