திருப்பூர் மாவட்டம் பண்ணைகிணறு கிராமம் தோட்டம்பட்டியில் தென்னை தொழிலாளர் களுக்கான கேரா சுரக் க்ஷா காப்பீட்டு திட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மத்திய அரசு) தளி தென்னை மகத்துவ மைய மேலாளர் கு. ரகோத்துமன் தலைமை வகித்து பேசியதாவது:
இந்த காப்பீட்டு திட்டத்திற்கான ஒரு வருட பிரிமிய தொகை ரூ.375/-.
இதில், ரூ.94/- மட்டும் தொழிலாளி கட்டினால் போதும். மீதம் ரூ.281/- வாரியத்தின் சார்பில் 75% மானியமாக கட்டி தரப்படும்.
இந்த திட்டமானது தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி இரண்டும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக உண்டாக்கபட்டுள்ளது. வருடா வருடம் பிரிமியம் கட்டி புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம், தென்னை மரம் ஏறும் தொழிலாளிக்கு 5 லட்சத்திற்கான காப்பீடு உறுதி செய்யப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் வேளாண்மை, வேளாண் வணிகம் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், 75 தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கு பெற் றனர்.