சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி சங்க நண்பர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி சங்க நண்பர்கள் சார்பில் 24ம் ஆண்டாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சிறுவர் சிறுமிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டப் பந்தயம், சாக்கு போட்டி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு போட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மரம் நடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
பின்னர் மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளின் பாதுகாப்பு மற்றும் அதனிடமிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பாம்புகள் பாதுகாப்பு ஆர்வலர் சஞ்சய் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் கானா இன்பேண்ட் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
தொடர்ந்து திருக்குறள் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் அதிமுக உரிமை மீட்பு குழு ராமநாதபுரம் பகுதி செயலாளர் புலி கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாணவரணி பொறுப்பாளர் வினோத் அன்னை தாசன் மற்றும் சமூக ஆர்வலர் சத்யன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறுவர் சிறுமியர்களை ஊக்கப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை ரஹமத்துல்லா, இருதயராஜ், அந்தோணி குருஷ், மோகன் பிரபு, சரவணன், கெமிளா ஆரோக்கியராஜ் மற்றும் அஜி உள்ளிட்ட ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி குழுவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.