தூத்துக்குடியில் பெண் குழந்தை கள் பாதுகாப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தை சார்ந்த பெண் உறுப்பினர்களின், கார் பயணத்தை எஸ்பி பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.
சமுதாயத்தில் பெண் குழந்தை களின் பாதுகாப்பு இன்றைய தினம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பல சம்பவங்கள் அவர்களுக்கு எதிர்காலத்தை நோக்கிய அச்சமும், சமூகத்தின் மீது அவர்களுக்கு கோபமும் எழுகிறது.
பெண் குழந்தைகள் இந்த சமுதாயத்தின் முக்கியமான அங் கம் என்பதை பொதுமக்களிடம் எடுத்துரைக்க தூத்துக்குடி டிரையல்ப் ளேசர்ஸ் ரோட்டரி சங்கம் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஆண்டு தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு ரோட்டரி மாவட் டம் 3212ன் மாவட்ட ஆளுநர் ஆர்.முத்தையா பிள்ளையின் அறிவு றுத்தலின்படி “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்“ திட்டத்தின் கீழ் கார் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கார் பயணத்தின் போது பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். 3 நாட்கள் நடைபெறும் இந்த கார் பயணத்தின் துவக்க விழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாலாஜி சரவணன் வாழ்த் துரை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பயணத்தில் ரோட்டரி சங்க பெண் உறுப்பினர்கள் டாக்டர். ப்ளோரா, வழக்கறிஞர் சொர்ணலதா, சங்கத்தின் தலைவர் பிரதிமா, செயலாளர் தனம் ராதா, பொருளாளர் பிரேமா ராஜீ மற்றும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரோட்டரி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.