fbpx
Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் விழா

பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் விழா

பெரியநாயக்கன்பாளையம் யுனை டெட் தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் விழா ஜி-20 ஒய்-20 மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் ஜார்கண்ட் ஆளுநரின் கௌரவ கல்வி ஆலோசகருமான பாலகுருசுவாமி-, சிஐஐ தலைவர் டாக்டர் கே.செந்தில் கணேஷ்-, பேராசிரியர் பி.கனகசபாபதி (செயலாளர் மற்றும் அறங்காவலர்), டாக்டர் சியாமா பிரசாத் (முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை), சி.ஆர்.பி.எப். துணை தளபதி ஸ்ரீராஜேஷ் டோக்ரா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.சண்முகம்,
செயலாளர் வி.அருண் கார்த்திகேயன், டாக்டர் ஆர்.ராதாகிருஷ்ணன்-(முதல்வர், யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்.கே.செந்தில் கணேஷ், “டிஜிட்டல்” என்ற வார்த்தையின் மூலம் சமீப காலங்களில் இந்தியா கடந்து வந்த மாற்றத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில் நுட்பங்களுக்கு சாமானியர்கள் எவ்வாறு பழக்கப்படுகிறார்கள் என்பதை அவர் துல்லியமாக விளக்கினார்.
முன்னாள் துணைவேந்தர் பால குருசுவாமி பேசுகையில், இன்றைய இளைஞர்களின் “திறமை” பற்றி எடுத்துரைத்தார்.

இளைஞர் சமுதாயம் முழு வளர்ச்சிக்கு தார்மீக ஒருமைப்பாட்டை
வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர் சமுதாயம் தனி மனித விழுமியங்களால் செழுமைப் படுத்தப்பட்டால் திறமை வெளிப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் பி.கனகசபாபதி, முத்தையா தியாகராஜன்(ஸ்பாரிபை ஸ்போர்ட்ஸ் இன்டஸ்ட்ரி), செல்வகுமார் வரதராஜன் (லேமன் வில் பிரஸ்), முனைவர் சரவணகுமார் (டீன், அண்ணா பல்கலைக்கழக வளாக மண்டலம், கோவை) ஆகியோரை உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img