கோவையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜி.டி.மியூசியத்தில் இந்திய கார் வகைப் பிரிவு இன்று (ஆக.18) திறக்கப்பட்டது.
ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.டி. கோபால் கூறியதாவது:
ஜி.டி.கார் மியூசியம் கோவையில் 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு முதல் வாகனத்துறையின் சாத னைகளை விளக்கும் வகையில், இந்திய கார் களின் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கார் மியூசியத்தை பார்வையிட்டு சென்றவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இப் பிரிவை துவக்க முடிவு செய்யப்பட்டது.அந்த கால கட்டத்தில் பிரபலமாக இருந்த 40 கார்கள் இக்காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இக்கார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டான்டார்ட் மோட் டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள் ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கப்பட்டவை. அதன் ஒரிஜினல் தோற் றம் மாற்றப்படாமல் புதுப்பிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கார் பிரிவு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.அறக்கட்டளை அறங்காவலர் அகிலா சண்முகம், பொதுமேலா ளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பார்வையாளர்களுக்கு அனுமதி கட்டணமாக 18 வயதுக்கு மேற் பட்டோருக்கு தனி நபருக்கு ரூ.125, அதிக பட்சம் 30 பேர் வரை கொண்ட குழுவுக்கு ரூ.100, 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு தனி நபர் ரூ.70, அதிகபட்சம் 30 பேர் வரை கொண்ட குழுவுக்கு ரூ.30, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களுடன் அதிகபட்சம் 30 பேர் கொண்ட குழுவுக்கு ஒரே கட்டணமாக ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு அனுமதி இலவசம். வாரம் முழுவதும் பகல் 1 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை தவிர்த்து காலை 9 முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். திங்கள்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.