தூத்துக்குடி மீன்பிடி துறைமு கத்தில் உள்ள வலைகட்டும் தளம், படகு ஒட்டுநர் அறை, மீன் பதப்படுத்தும் இடம், அரசு பனிக்கட்டி தயாரிக்கும் ஆலை மற்றும் பாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள், டீசல் பங்க், படகு பழுதுபார்க்கும் இடம், மீன்வர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகம், மீன் ஏலக்கூடம் மற்றும் துறைமுகத்தினை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பாக மீன்வளத்துறை இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளனர்.
இக்குழுவினர் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து தேவையான வசதிகள் செய்து தருவர்.துறைமுகத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, என் னென்ன வசதிகள் வேண்டும், அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இக்குழு பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும்.
துறைமுகத்திற்கு தேவையான திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், தூத்துக் குடி மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் வைலா, வட்டாட்சியர் செல்வக்குமார், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.