fbpx
Homeபிற செய்திகள்டிஎன் ஹாப்பி கிட்ஸ் பள்ளியில் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளுக்கு அனுமதி கட்டணம் விலக்கு

டிஎன் ஹாப்பி கிட்ஸ் பள்ளியில் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளுக்கு அனுமதி கட்டணம் விலக்கு

இந்தியாவின் முதல் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூலாக செயல்பட்டு வரும் டிஎன் ஹாப்பி கிட்ஸ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா கோவை சாய்பாபா காலனியில் நடைபெற்றது.
விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண் பரிசோதனை மற்றும் ரத்தப் பரி சோதனை முகாம்களை தொடங்கி வைத்தார்.

பின்னர், டிஎன் ஹாப்பி கிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் அருண் சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு, கொளத்தூர், தாம்பரம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வரும் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல், இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தனித்து வமான கல்வி முறையாகும்.
குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

பள்ளி வளாகம் முழுவதும் கேமராக்கள் மற்றும் ஆன்லைன் கண்காணிப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் தங்களது செல்போன் மூலம் நேரடியாக கண்காணிக்க முடியும்.

இந்நிலையில் அமைச்சரின் ஆலோசனையை ஏற்று, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு அனுமதிக் கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். மேலும், ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவன ஊழியர்கள், ராபிடோ, ஓலா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு ஜூன் 1 முதல் 6ம் தேதி வரை அனுமதிக் கட்டணம் இல்லாமல் சேர்க்கை வழங்கப்படும். இந்தியாவின் முதல் ரோபோடிக் ஆன்லைன் மானிட்டரிங் பள்ளி யையும் நிறுவனம் நடத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img