fbpx
Homeபிற செய்திகள்வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் சேலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சரங்கம் -...

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பில் சேலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சரங்கம் – தமிழருவி மணியன் பங்கேற்பு-

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ மாணவர்களுக்கான”வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. அதற்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் விழா அரங்கத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் டீன் முனைவர் டாக்டர் டி.என்.கீதா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் இளம் தலைமுறையினர் கள் மனம் விட்டுப் பேசும் சூழல் குறைந்து வருகிறது கேள்வி ஞானம் மிக முக்கியமானது.

பல அறிஞர்கள் பேசுவதை கேட்டுத்தான் நான் இன்று பேச்சாளராகியுள்ளேன். பாரதியார் தனது நூல்களில் சாதியை பற்றி கூறியிருப்பார். இதில் சாதி என்பது தமிழர் சாதி என்பதையே குறிக்கும் எனவும் தமிழில் மூன்று நூல்கள் தான் இலக்கியம் பற்றி கூறுகின்றன.

அதில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், என்பது ஆகும்.மனித சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நம்முடைய மதநல்லிணக்கம் தேவை நாம் பெற்ற சுதந்திரம் சுமார் 5லட்சம் பிணங்கள் மீது பெற்று தான் சுதந்திரம் அடைந்துள்ளோம். அன்றைய சூழலில் சமய காழ்ப்பு இருந்தது.
ஒழுக்கத்தைதான் மதமாக மாற்றுகிறார் திருவள்ளுவர்.

ஒழுக்கம் தான் தனி மனிதனுக்கான வெற்றி & இன்பம் அனைத்தையும் சிறப்பாக தரும் ஒழுக்கத்தின் உயர்வு மேன்மையே செயின்ட் அகஸ்தியன் என்ற அறிஞர் ஒரே வரியில் அன்பாய் இரு என்று கூறினார். திருவள்ளுவர் தனது திருக்குறளில் வரைவு இல் பற்றி ஒரு இடத்தில் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி திருமண வரைவு என்பதை பொருள் பெண்டீர் என்று கூறினார். இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

இந்த பேச்சரங்க நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் பரிசை சந்தோஷ் குமார் (அறிஞர் அண்ணா அரசுகலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி), இரண்டாம் பரிசை நாகராஜ் (சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி திருப்பூர்), மூன்றாம் பரிசை ரோஷினி (என்.எம்.கே.ஆர்.வி மகளிர் கல்லூரி பெங்களூரு) ஆகியோர் பெற்றனர். இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த பேராசிரியர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு சிறந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் தா.சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஏ.மாணிக்கம் மற்றும் முதல்வர் பேகம் பாத்திமா உடனிருந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இவ்விழாவின் முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் அ.பூ.நடராஜன் நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img