உலகமெங்கும் மார்ச் 9-ம் தேதி அனுசரிக்கப் படும் ‘உலக சிறுநீரக தினம்’ நிகழ்விற்கு ஒரு முன்னோட்ட நிகழ்ச் சியாக 5 கி.மீ. ஓட்ட நிகழ்வை ஏஐஎன்யூ (AINU) மருத்துவமனை கடந்த 5-ம் தேதி நடந்தது.
உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான சிறுநீரகத்தை ஆரோக்கி யமாக பேணி பாதுகாப்பது மீதான விழிப்புணர்வை பரப்புவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு திட்டத்தை ஆதரிப்பதற்காக உடற் தகுதி ஆர்வலர்கள், தொழில்முறை ஓட்ட வீரர்கள், பெருநிறுவனங் களின் பணியாளர்கள், மாணவர்கள், குடும்ப பெண்கள் உட்பட 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
சென்னையிலுள்ள ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு நியூராலஜி (AINU) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் குமார் பாலகிருஷ்ணன் இந்நிகழ்வில் பேசியதாவது:
சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க இந்த 5 கி.மீ. ஓட்ட நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு
நாட்பட்ட சிறுநீரக நோய்கள் இருக்கின்ற 10 நபர்களுள் ஏறக்குறைய 9 நபர்களுக்கு இப்பாதிப்பு இருக்கிறது என்று பெரும்பாலானோர் அறிவதில்லை. மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு உள்ள 5 நபர்களுள் 2 நபர்கள் மட்டுமே நோயின் தீவிரத்தை அறிந்திருக்கின்றனர் என்று ஆய்வு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.
மாநில நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சிறுநீரக விழிப்புணர்விற்கான 5 கி.மீ. ஓட்ட நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடங்கி வைப்பதற்கு முன்பு அவர் பேசியதாவது: சிறுநீரக ஆரோக் கியத்தை வலியுறுத்தி ஊக்குவிப்பதற்கு இந்த முன்னெடுப்பு நடவடிக்கை மிக முக்கியமானது.
சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க இந்நிகழ்வு நிச்சயம் உதவும். சிறுநீரக நோய் என்பது, தீவிரமான உடல்நல பிரச்சனை என்பது அனைவரும் அறிந்ததே.
சமுதாயத்தையே முடக்கிப்போடுகின்ற பொது சுகாதார நெருக்கடி நிலையாக இது உருவெடுக்காமல் தடுப்பதற்கு மருத்துவப் பணியாளர்களோடு அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.
இதுபோன்ற முன்னெடுப்புகளின் வழியாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை, வாழ்க்கையில் பின்பற்றுமாறும், உரிய காலஅளவுகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாது காக்க தன்முனைப்பு நடவடிக்கையை எடுக்கவும் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.