fbpx
Homeபிற செய்திகள்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற தினேஷ் குமார், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 13 வது ஆணையராக தினேஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். 2017 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான இவர் சிவகாசியில் சப் கலெக்டராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குனர் மற்றும் உதவி ஆட்சிய ராக பணியாற்றியுள்ளார் .

தூத்துக்குடி மாநகராட்சி

கடந்த வாரம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி உயர்வு செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அந்தப் பணியிடத்திற்கு உதவி ஆட்சியராக இருந்த தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி யதாவது:

தூத்துக்குடியை வளர்ச்சி பாதைக்குள் கொண்டு செல்வேன். தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவேன். சுகாதாரம் அடிப்படை கட்டமைப்பு தூய்மை பணி என அனைத்து பணிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து மக்கள் வாழ்வதற்கு முழு தகுதி உள்ள இடமாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் சமூகநலத்துறை அமைச்சருமான கீதா ஜீவனை புதிய மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற தினேஷ்குமார் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். இந்த நிகழ்வின் போது ஜீவன் ஜேக்கப் அருகில் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img