fbpx
Homeபிற செய்திகள்பாஜக கொடியேற்று விழா

பாஜக கொடியேற்று விழா

தருமபுரி இலக்கியம் பட்டி பஞ்சாயத்து வெண்ணாம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. பூத் கமிட்டி இன்சார்ஜ் சிவ பெருமாள், கிளைச் செய லாளர் கோவிந்தராஜ், தருமபுரி மேற்கு ஒன்றிய தலைவர் கணபதி தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வெங்கட்ராஜ், ஐஸ்வர்ய முருகன்.

OBC அணி மாவட்ட தலைவர் காவேரி வர்மன், ஐடி விங் தலைவர் மகேஷ் பாபு, தர்மபுரி மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் அன்பரசன், தர்மபுரி மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன், ஓபிசி அணி ஒன்றிய தலைவர் சஞ்சீவன், ஐடி விங் ஒன்றிய தலைவர் சக்திவேல், தமிழ் மற்றும் இலக்கிய வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சித்தன், நல்லம் பள்ளி கிழக்கு ஐடி விங் தலைவர் செந்தில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கட்சிநிர்வாகியும் தொழிலதிபருமான ஐஸ்வர்யா முருகனின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img