fbpx
Homeபிற செய்திகள்கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக டாக்டர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்ற மாராத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனை மற்றும் கோவை கிழக்கு ரோட் டரி சங்கம், கோவை ஜி.சி.டி.ரோட்ராக்ட் சங்கம் இணைந்து புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாராத்தான் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த மாராத்தான் ஓட்ட போட்டியை கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு எஸ்.எல்.வி. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

விழாவுக்கு கோவை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் கே.கே.ஜெயகுமார், கோவை ஜி.சி.டி. ரோட்ராக்ட் தலைவர் ஹேமானந்த் ரொட்டேரியன் ராஜேஷ் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் திலிப் குமார், சல்மா அசீம், மதுரிதா உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img