fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் சிஐஇஎல் மனித வளம் திறன் மேம்பாட்டு சேவை மையம் திறப்பு விழா- மா.பா.பாண்டியராஜன் பங்கேற்றார்

தூத்துக்குடியில் சிஐஇஎல் மனித வளம் திறன் மேம்பாட்டு சேவை மையம் திறப்பு விழா- மா.பா.பாண்டியராஜன் பங்கேற்றார்

தூத்துக்குடி டிஎஸ்எப் ஹோட்டல் கூட்டரங்கில் வைத்து எம்.ஏ.எஃப்.ஓ.ஐ மற்றும் பியர்ல் குரூப் ஆப் கம்பெனி சார்பில் சிஐஇஎல் மனித வளம் திறன் மேம்பாட்டு சேவை மையம் திறப்பு விழா டி.எஸ்.எப் பிளாசாவில் நடந்தது.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பியர்ல் ஷிப்பிங் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் எட்வின் சாமுவேல் வரவேற்றார். சி.ஐ.இ.எல். இயக்குனர் மா.பாபாண்டியராஜன் சிறப்புரையாற்றினார்.

விழாவில் சேவை மைய தலைமை நிர்வாகி லதா பாண்டியராஜன், கல்வியாளர் எழில்வாணன், சேவை மைய நிர்வாக இயக்குனர் நிவேதா ராபின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நேச்சுரல் நிர்வாக இயக்குனர் சி.கே.குமாரவேல் சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேவை மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு சேவை மையத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம்.

தூத்துக்குடியில் 70 வது சேவை மையம்

தூத்துக்குடியில் 70 வது சேவை மையமாகும், வருகிற மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் 100திறன் மேம்பாட்டு சேவை மையங்கள் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இன்றைக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு தான் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஒரு நிறுவனத்திற்கு திறனான வேலைக்கு அனைத்து அம்சங்களுடன் பணியா ளர்களை தேர்வு செய்யும் அமைப்பினை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். அது போல சேவை மையம்தான் தூத்துக்குடியிலும் துவங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தமிழகத்தில் தான் திறன் மேம்பாட்டு பயிற்சி அதிகமாக வழங்கி இளைஞர்கள் இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இந்திய வர்த்தக சங்க நிர்வாகிகள், கப்பல் முகவர்கள் சங்கத்தினர், தொழில் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img