ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ‘ஐசிஐசிஐ ப்ரு சுக் சம்ருத்தி’ என்ற புதிய பங்கேற்கும் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமான பலன்கள் மற்றும் வளர்ச்சித் திறன் ஆகியவற்றின் இரட்டை நன்மைகளை போனஸ் வடிவில் வழங்குகிறது. தவிர, பாலிசியின் முழு காலத்திற்கும், வருமான காலம் உட்பட, குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கி, இந்த ஆயுள் காப்பீடு தொடர்கிறது.
சேவிங்ஸ் வாலட்
‘சேவிங்ஸ் வாலட்டின்’ இந்த புதுமையான அம்சம், வாடிக்கையாளர்கள் வருவாயை கொடுப்பனவுகளாக பெறுவதற்குப் பதிலாக, அதை திரட்டி மற்றும் வளர்க்க அனுமதிக்கிறது.
இந்த திரட்டப்பட்ட மொத்தத் தொகையை பாலிசி காலத்தின் போது எந்த நேரத்திலும் ‘சேவிங்ஸ் வாலட்டில்’ இருந்து அல்லது முழுமையாக திரும்பப் பெறலாம்.
இந்த அம்சம் ஆனது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப மாறிவரும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் தலைமை விநியோக அதிகாரி அமித் பால்டா கூறுகையில், ‘ஐசிஐசிஐ ப்ரு சுக் சம்ருத்தி வாடிக்கை யாளர்களுக்கு உத்தரவாதமான முதிர்வு நன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வருடாந்திர போனஸ், (அறிவிக்கப்படும் போது) அவர்களின் திரட்டப்பட்ட மொத்தத்தொகையை மேலும் பெருக்குவதில் வெற்றியடைய உதவும்.
‘சேவிங்ஸ் வாலட்’ மற்றும் ‘சேவ் தி டேட்’ போன்ற அம்சங்களைக் கொண்ட இந்த பல்நோக்கு சேமிப்புத்திட்டமானது, மாறிவரும் தேவைகள் மற்றும் வாழ்க்கை நிலைகளுக்கு மத்தியில் நிதி ரதியாக பாதுகாப்பாக (ஆயுள் காப்பீடு மூலம்) இருக்க உதவும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்வின் சாதனைகளைக் கொண்டாட உதவுகிறது’ என்றார்.