வங்கி சேவைகளை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் வகையில் முன்னணி நிதி தொழில் நுட்ப நிறுவனமான ஏஸ்மணி புதிய ஆல்-இன்-ஒன் கட்டண கருவியை அறிமுகம் செய் துள்ளது.
இது மைக்ரோ ஏடிஎம், ஆதார் ஏடிஎம் மற்றும் பொருட்களுக்கான சேவை கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த கருவிக்காக 250 ரூபாய் செலவு செய்யும் இல்லத்தரசிகள் மற்றும் வணிகர்கள் கூடுதல் மற்றும் நிரந்தர வருமானம் ஈட்டலாம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஏஸ்மணி நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் நிமிஷா ஜே வடக்கன் கூறுகையில், இந்த கருவியில் எந்த வங் கிக் கார்டுகளையும் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். வாடிக் கையாளர்கள் டெபிட் கார்டுகள் அல்லது ஆதார் கார்டுகளுடன் வணிகர்களை அணுகி தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கலாம். அவர்களது வங்கிக் கணக் குகளிலும் பணத்தை டெப்பாசிட் செய்யலாம்.
அனைத்து வகையான ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துவதற்கு வசதியாக இந்த கருவியில் பாரத் பில் கட்டண முறை வசதியும் உள்ளது.
இந்த கருவி வணிகர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை வழங்குவதோடு, வாடிக் கையாளர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்கும் என்றார்.
இந்நிறுவனம் முன்பு ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மற்றும் ஏடிஎம்கள் இல் லாமல் ஒரு கீபேட் போனைப் பயன்படுத்தி நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக ஆப்லைன் யுபிஐ ஏடிஎம் கார்டை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டு வாசலில் ஏடிஎம் வசதியையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கொரோனா காலத்தில் இதை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.