fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் சுய உதவிக்குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழா

தூத்துக்குடியில் சுய உதவிக்குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழா

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அக்டோபர் 28 அன்று தூத்துக்குடியில் பெண்கள் சுயஉதவிக் குழு பயனாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவை நடத்தியது.

இதில், வங்கியின் செயற்குழு இயக்குநர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 400 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், சர்வோதயா அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ராஜனும் இதில் பங்கேற்றார்.

வங்கியின் கள பொதுமேலாளர் (சென்னை) முகேஷ் சர்மா மற்றும் மதுரை மண்டல மேலாளர் கே.கிஷோர் குமார், பேங்க் ஆஃப் இந்தியா வின் தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி, கோவில்பட்டி மற்றும் இராமநாதபுரம் வங்கி பணியாளர்களும் பங்கேற்றனர்.

ஆரம்பத்தில், வங்கி ஜூன் மாதத்தில் ரூ.20 கோடி வரை கடனுதவி ஒப்புதலை வழங்கியிருந்தது. தற்போது மேலும் ரூ. 5 கோடி ஒப்புதலை இந்நிகழ்ச்சியின் மூலமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img