fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

பிஎஸ்ஜி மாணவர் இல்லம் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் துவக்கப் பட்ட ஒரு இல்லமாகும். இது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. இந்த இல்லம் சார்பில் இன்று தீபாவளி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில், பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்கள், பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், என பலர் கலந்து கொண்டனர். இதில் மாண வர்களுக்கு ஆடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கினர்.

இங்குள்ள மாணவர்களுக்கு மேக் எ டிபரன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பிஎஸ்ஜி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் செயலாளரால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img