இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் “இந்துஸ்தான் பொங்கல் 2025” பாரம்பரிய முறையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. பள்ளி மாணவ மாணவியர் நாட்டுப்புற நடனத்தோடு ஒயிலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட் டம், கோலாட்டம் என பல வகையான கலை நிகழ்ச் சிகள் அனைவரையும் கவர்ந்தன.
பள்ளி ஆசிரியர்களோடு பெற்றோர்களும் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
பள்ளி வளாகத்தில் குதிரை சவாரி, ஒட்டக சவாரி, குதிரை வண்டி சவாரி, பாம்பே மிட்டாய், கரும்புச்சாறு கடை என்று திருவிழாக் கோலமாக இருந்தது.
பொங்கல் விழாவை இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலர் டாக்டர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் டாக்டர் கே.பிரியா, சேர்பெர்சன் யமுனா சக்திவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி முதல் வர் ஆ.செண்பக வல்லி தலைமையில் இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.