கோவையில் தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிலையம் ஆகியோர் இணைந்து இளைஞர்களுக்கான மாநாட்டை கல்லூரி வளாக அரங்கில் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார்.
இதில் சுவாமி நரசிம்மானந்தா ஜி,விமுர்த்தானந்தா ஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இன்றைய இளம் மாணவர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் செயல்களும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். உயர் கல்வி சேர்க்கை விகிதம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழகம் 50 சதவீதமாக இருக்கிறது.
இளம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊர்களில் உள்ள பள்ளி பருவத்தை முடித்த மாணவர்களை உயர் கல்வி பயில அறிவுறுத்தி கல்லூரிகளில் சேர்த்தி விடுவதை ஒரு கடமையாக கருத வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் காமகோடி இளைஞர்களிடையே பேசியதாவது:
இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நமது நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம். இந்திய நாட்டின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தி அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.