இந்தியாவின் முன்னணி தோல் பராமரிப்பு பிராண்டான காயா, சென்னையில் தனது ஐந்தாவது கிளினிக்கை துவங்கியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த கிளினிக் அதிநவீன வசதி, தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
கிளினிக் துவக்க விழா வில் முன்னாள் மிஸ் சென்னையின் சம்யுக்தா சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் வாடிக்கையாள ரின் தோல் நிலையை ஆழ மாக பகுப்பாய்வு செய்வதன் மூலம், கிளியர் ஏஐ சிகிச்சை பரிந்துரைகளை வழங்கு கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் குறிப்பிட்ட தேவை களை நிவர்த்தி செய்ய தனித்தனியாக வடிவமைக் கப்பட்ட தீர்வுகளைப் பெறுவதை உறுதிசெய்கிறது என கிளினிக் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயாவின் குளோபல் சிஇஓ, ராஜீவ் சூரி கூறுகையில், “எங்கள் 5வது கிளினிக் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்டதன் மூலம் காயா மேம்பட்ட தோல் சிகிச்சையை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறது” என்றார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சம்யுக்தா சண்முகநாதன் உயர்மட்ட தோல் மருத்துவத்தை அனைவருக்கும் அணுகக் கூடியதாகவும் பயனுள் ளதாகவும் ஆக்குகிறது என பாராட்டு தெரிவித்தார்.