fbpx
Homeபிற செய்திகள்கோவையில் டொயோட்டாவின் முழு மின்சார ‘அர்பன் க்ரூயிசர் இபெல்லா’ அறிமுகம்

கோவையில் டொயோட்டாவின் முழு மின்சார ‘அர்பன் க்ரூயிசர் இபெல்லா’ அறிமுகம்

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனை மலைஸ் டொ யோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் ஹைரைடர் ஆனைமலைஸ் லிமிடெட் எடிஷன் மாடலும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக விழாவில் வாடிக்கையாளர்கள், வங்கி அதிகாரிகள், ஷோரூம் ஊழியர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை யைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு புதிய மாடல் களை பார்வையிட்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐசர் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ராஜன் ஆறுமுகம், தலைமை நிலைய நிர்வாகிகள் முரளிதரன், தரணிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வாகனங்களை அறிமுகப்ப டுத்தினர்.
அவர்கள் பேசுகையில், “அர்பன் க்ரூயிசர் இபெல்லா மாடல், நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த செயல்திறனுடன் வடிவ மைக்கப்பட்டுள்ளது” என்றனர். மேலும், ஹைரைடர் ஆனைம லைஸ் லிமிடெட் எடிஷன் மாடலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img