fbpx
Homeபிற செய்திகள்லஞ்சமற்ற தமிழகமாக மாற்ற முதல்வர் விஜய் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்துகிறார் கோவை கதிர் கல்லூரி விழாவில்...

லஞ்சமற்ற தமிழகமாக மாற்ற முதல்வர் விஜய் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்துகிறார் கோவை கதிர் கல்லூரி விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2026- 2029 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் உரையாற்றி னார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய இளைய தலைமுறை தான் எதிர்கால தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரை ஜென்சி கிட்ஸ் தான் உருவாக்கினார்கள். முதல் தலைமுறையின் வாக்கு கள் மிக முக்கியமானது என் பதை நம் தமிழகம் கண்டு இருக்கிறது, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தை சிறந்த மாநிலமாக உயர்த்துவதற்கும், தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத் தருவதற்கும், லஞ்சமற்ற தமிழகமாக மாற்றுவதற்கும் பல்வேறுத் திட்டங்களை வகுத்து வருகிறார், அதே சமயம் கல்விக்கான பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். எளிமை மற்றும் இனிமை இவரின் வெற்றியின் சிகரமாக விளங்குகிறது. அதனால் உங்களுக்கு எல்லாம் சொல்வது ஒன்றுதான். அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் ஒரு மாணவரிடத்திலே இருந்தால் அந்த மாணவர் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்பதற்கு நம் முதலமைச்சர் ஒரு சாட்சியாக விளங்குகிறார்.


நான் 1977 ஆம் ஆண்டு முதல் மக்கள் பணியாற்ற தொடங்கினேன் இன்று வரை மக்கள் பணியில் தொய்வின்றி உழைத்து வருகிறேன். அதன் காரணமாகத்தான் மக்கள் என்னைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வெற்றிக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக உழையுங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.


அதே போல தாய், தந்தையர்களின் கனவுகளை நிறைவேற்றும் குழந்தைகளாக இருக்க வேண்டும். இந்த மூன்றாண்டு காலம் கல்விக்காக மட்டுமே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் ஆட்படாமல் நல்ல குழந்தைகளாக இந்த சமுதாயத்தை காக்கிற குழந்தைகளாக நீங்கள் மாற வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.


கோவை மாவட்ட அமைச்சர் களான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அமைச்சரான விக்னேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீகிரி பிரசாத், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் நா.சுனில் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.
கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஈ.எஸ்.கதிர் , செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் முன்னிலை வகித்து, மாணவர்க ளுக்கான 100% மற்றும் 75%ம் கல்விக் கட்டண சலுகைக்கான சான்றுகளை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள். இவர்களுடன் கதிர் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் கே.எஸ்.மிதிலேஷ் நன்றி கூறினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். கற்பகம் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை மாணவர் சேர்க்கை அலுவலர் ஜோதி ஒருங்கிணைத்து நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img