Homeபிற செய்திகள்வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை: டிஜிட்டல் காப்பீட்டுச் சேவைகளை வலுப்படுத்தும் ‘பாலிசி கனெக்ட்’

வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை: டிஜிட்டல் காப்பீட்டுச் சேவைகளை வலுப்படுத்தும் ‘பாலிசி கனெக்ட்’

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுக் காப்பீட்டுச் சேவை நிறுவனமான PolicyConnect, காப்பீட்டுச் சேவைகளை எளிதாகவும், வசதி யாகவும், வாடிக்கையாளர் களுக்கு ஏற்ற வகையிலும் வழங்கும் நோக்கத்துடன் 18 மே 2019 அன்று தொடங்கப்பட்டது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் பாண்டியன் தலைமையில், வாடிக்கையாளர் சேவைத் திறன்கள், டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் காப்பீடு தொடர்பான உதவிச் சேவைகளை மேம்படுத்துவதில் PolicyConnect தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்குவதையும் நிறுவனம் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட காப்பீட்டுச் சேவைகள்
றிPolicyConnect, பாலிசி தேர்வு, பாலிசி புதுப்பித்தல், பாலிசி தொடர்பான சேவைகள், ஆவணங்கள் மற்றும் காப்பீட்டுக் கோரிக்கைகள் தொடர்பான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுக் காப்பீட்டுச் சேவைகளை வழங்குகிறது.
விற்பனை, வாடிக்கையாளர் சேவை, க்ளெய்ம்ஸ், நிதி மற்றும் பின்தளச் செயல்பாடுகள் எனத் தனித்தனி குழுக்களைக் கொண்டு, வாடிக்கையாளர்களின் காப்பீட்டுப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருங்கிணைந்த உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் தகுதிகளுக்கு ஏற்ப பொருத்தமான காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை அறிந்துகொள்ள உதவும் வகையில், நம்பகமான காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img