Homeபிற செய்திகள்கை கழுவும் விழிப்புணர்வு: கோவையில் 400 மாணவர்கள் பங்கேற்பு

கை கழுவும் விழிப்புணர்வு: கோவையில் 400 மாணவர்கள் பங்கேற்பு

உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, டென்எக்ஸ்ஹெல்த் டெக்னாலஜீஸ், கிக்கிள் கல்வி அறக்கட்டளை சார்பில், கோவை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சரவணம்பட்டி அல்கெமி பப்ளிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பேச்சு, ஓவியம், நாடகப் போட்டிகளில் 200 மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் கே. விஜயன், டாக்டர் பூபாலா அர்ஜுனமூர்த்தி, சிந்துரி அனந்த், யு.கே. அனந்தபத்மநாபன் ஆகியோர் கை கழுவுவதன் அவசியம், நோய்த்தடுப்பு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் குறித்து பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img